Posts

Showing posts from August, 2024

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

முருகனை கூப்பிட்டு முறையிட தோணுது மறுகணமே மொத்தமாய் மறைந்து போகுது பூமி திறந்து விரிந்து காக்குது ஆகாயம் அள்ளி வழங்கி தேற்றுது சிரிப்பு உடன் கண்ணீர் சேர்ந்துகிட்டு பெருகுது மூச்சிலே  காற்று முன்னுபின்னுமாய் தடுமாறுது முருகனை கூப்பிட்டு முறையிட தோணுது... மறுகணமே மொத்தமாய் மறைந்து போகுது அனைத்தும் நீ என்று புரியுது... தமிழ் கூறும் உலகம் உன்னை போற்றுது முருகனை நினையாது இருக்க மனம் மறுப்பது🙏