Posts

Showing posts from November, 2023

பருவ பயன்

காற்று‌ நம்‌ இடைவெளி இனைக்கிறது,  இதமாய் இருக்கிறது இருந்தாலும்.....  அறியாமல் போகிறது... பருவ மழை பிடித்து  பாடாய் படுத்தினால்  பார்த்து  இடமாறியதை தெரிந்து தவித்துதானே போகிறோம், அறிந்த போகிறது... பட்டால்தான் தெரியுது  பட்டவர்த்தனமாக தெரிகிறது வெப்பம் மாறினால்  நுட்ப்பம் நகர்கிறது நோவு நீள்கிறது சத்தம் அதிரும் நெம்பி உதிரம் நீராய் நெகிழும் உயிராய் விளங்கும் உறவு வணங்கும் உலகம் உய்க்கும் அதுவாக இயங்க அனுவை அசைக்கும் ஆதாரம் ஆதித்திய அழகாக அனுஷ்டிக்க அள்ளித்தரும் அருள்மிகு அண்ணபூரனி  ஜென்மம் தழைக்க ஜனனி ஆகாய அருட்பெருஞ்ஜோதி அனாயாச அபிவிருத்தி விண்ணம் ஆக்கி அனுபவித்தாட இனிதே இருந்திட இன்னல் தவிர்த்து போக இச்சகத்தில் இல்லறம் இயைந்த இயலை இசைக்க இயல்பான வாழ்வை வாழ வழி செய்திடுக...

இருள் பெரியது

 பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஜீவிப்பது தான் மனித இனம்...  உதாரணம்: உலகம் எவ்வாறு தோன்றியது என்ற கேள்விக்கு நம்பபடும் பதில் இருக்கிறதே தவிற உறுதியான, சரியான விடை கிடையாது...  மேலும் விடை தெரியாத இருள் பெரியது விடை அறிந்த வெளிச்சம் சிறியதே...  ஏதோ என் சிற்றவிற்கு எட்டியவரை🤔