நமசிவாயமே நவீனமே
நாகரீகம் என்று நடிப்பீரே
நாற்றத்தின் நேரியாய்
நின்ற மறையோனே
நடுநிசி நர்தனமே
நிர்வாண நாடகமே
நாசியின் நறுமணமே
நாவிரியும் நெடுவிதழே
நாபில் தடம்மாறுமே
நடப்பதெல்லாம் விசித்திரமே
நிலைமாறும் தாண்டவமே
நாலுசுவற்றினுள் நாடகமே
நிலையாமை நிச்சயமே
நாடி தளர்ந்தால்
நமசிவாயமே...
Comments
Post a Comment