களை எடுக்கனும்
களை எடுக்கனும்
காரி உமிழனும்...
சுயஒழுக்கத்த சுய நலத்துக்கு அடமானம் வைத்த பிழைக்குற ஈனபிறவிகளை
களை எடுக்கனும்
காரி உமிழனும்...
சமூகத்தில் சந்தர்ப்பவாதமே
சந்தர்ப்பவாத சமூகமே
சற்று சிந்திக்க
கந்துவட்டி கொடுமையால்
இனமான எம்மக்களை வேதனையாக்கி
சிதைக்கும் மடைமையை
களை எடுக்கனும்
காரி உமிழனும்....
சோற்றுக்கே வழி இல்லா
சாதியாக மாறுதே
சேற்றில் முளைக்கும் செந்தாமரை
சருகாக போகுதே
சீற்றம் கொண்டு சரிசெய்து
சீறிபாயந்து சிறகடிக்காது
சிதிலமடைந்த சமூகத்தை
களை எடுக்கனும்
காரி உமிழனும்....
ஒவ்வொரு தமிழனும்
தலைககுனியனும்
களை எடுக்கனும்
தலை நிமரனும்
Comments
Post a Comment