நீர் திவளைகள்
நீர் திவளைகளின் திட அடர்வில்
நீர் அலைகள் ஏது
நீர்த்துவிடா நிதியத்தின்
நீர்புகுந்த நிறமாலை தாது
நீந்திச் சென்று நிருபித்த
நிர்வாண நயனாடு நடவு
நாவிதழ் ஈரபத நோவு
நெடுவிரி நீள் துவார விந்தை
நீச்சமில்லா அகந்தை
நித்திரையில் நித்தயமல்லி உடன்
நரம்பு மலரும் சந்தை
நான் நீ ஆணவமே
நிலையாமை நிச்சயமே
நாடி தளர்ந்ததும்
நமசிவாயாமே
Comments
Post a Comment