உருகி உருகி முருகா
உருகி உருகி தன்னை வருத்தி முருகா
உன்னை வணங்குவோரை கண்டால் முருகா
என் சித்தம் சிந்தி போகுதே முருகா
அவர்கள் குறைகளை தீர வேண்டும் என்று கேட்க தோன்றுதே முருகா
என் சஞ்லங்கள் மறந்து சென்று விடுகிறதோ முருகா
இதை நான் சொல்லி உனக்கு தெரிய போகிறதோ முருகா
உன்னை காட்டிலும் உன் பக்த கோடிகள் பெரிது என்று படுகிறதே முருகா...
உணர்ந்து கொள்வதும் உறைக்க வைப்பதும் நீயே அன்றி வேறு யாரோ முருகா...
🙏🏻உருகி உருகி, தனை வருத்தி வணங்கும் எம்மக்களிடத்தே... உனை பரிபூரணமாக காண்கிறேனே இறைவா🙏🏻
Comments
Post a Comment