மூதாதையர் வழிபாடு (ancestral worship) என் மூதாதையரை வழிபடுகிறேன் எனக்கு வழிகாட்டிகளாய் என் இருப்புக்கு அடுதளமிட்ட அன்பு தெய்வங்களாய் ஏன் நான் பார்க்காதவர்கள், என் பாட்டி சொல்ல அறிந்த என் அத்தை, பருவ வயதில் தவறியவர் நான் நினைவு அறிந்தவரை பிணக்கோலத்தில் அவர் படம் எங்கள் பூஜை அறையில் நான் தினமும் நினைக்கும் ஒருவர் எங்கள் வீட்டோடு தங்கிவிட்ட எங்கள் வீட்டு பெண் எங்கள் அரியபெறும் செல்வங்களான எங்கள் வீட்டு பெண்களுள் பெரியவர் என் மூதாதையரை வழிபடுகிறேன் என் தாத்தா, நல்ல வார்த்தைகளை தவிற நான் அவரிடமிருந்து ஏதும் அறியேன் என் ஆயா, பல இன்னல்களுக்கிடையே பெரிய கௌரவத்துடன் வாழ்ந்து காட்டிய... அவர் எங்களுடன் இருந்தது சிறிய காலமே ஆயினும் பல பெரிய அனுபவங்களை எனக்கும் தந்துவிட்டு தான் சென்றுள்ளார்... நினைத்துப் பார்க்கிறேன்!!! இன்னும் சொல்லலாம் ??? என் மூதாதையரை பற்றி நீங்களும் தம்தம் மூதாதையரை இத்தருனத்தில் நினைவுக் கூறலாம், தினமும் வழிபடாலாம் தவறு இருந்தால் என்னை நீங்கள் முழு உரிமையுடன் கண்டிக்காமல் செல்ல வேண்டாம்... மூதாதையரை வழிபடுங்கள் சாதி மதம் இனம் அற்று போகும் சுயச்சார்ப்ப...