மந்தை
My first post after getting inspired after creating this blog from 2011
"மந்தை"
தோற்றத்தை வைத்து அளந்திடும்
எண்ணத்தை சுழும் அகந்தை
மாற்றத்தை கானும் வாழ்கை
மனதிற்கு அறியா விந்தை
வெட்கத்தை வைத்து வெற்றியை வீழ்த்தும்,
வெற்றிடம் நோக்கி விரிந்திடும் உலகில்
வேஷத்தை தரிக்கும் மானிட சந்தை
விட்டதை பிடிக்க விரட்டிடும் வேட்கை
விட்டு கொடுக்கா விளக்கு முடியா
இதுவும் விலங்குகளின் மந்தை
பிறந்த இடம் பனிபிரதேசம்,
புகுந்த இடம் மர்மதேசம்
போராடி போய் சேர்ந்தாய்,
புதுவிந்தையினை நீ புரிந்தாய்
விளையாட்டில் விளைந்தாய்,
விரும்பியுடன் வழிந்தாய்
விழியாளுக்கு விருந்தானாய்,
வறுமையிலும் வற்றாமல் வளங்களை குவிப்பாய்,
வறண்டாத நதியாகவிடாமல் சுரப்பாயே,
விட்டு கொடுப்பேனா உன்னை நான்
பவள பனி என்று பெயர் சூட்டுவேன்,
பெறுமைகளை புகழ்பாடுவேன்
பொறுமையுடன் பொறுத்திரு,
பூந்தேவி பரிசளிப்பாள்
Comments
Post a Comment