புழகடை மல்லிகை கொடியே
மனம் வீசும் மல்லிகையே
மலர்வாயே தினம் தினமே
இரவில் நீ பூக்கிறாயே
இதழ் விரித்து சிரிக்கிறாயே
இதயத்தை ஈர்க்கிறாயே
இரகசியமாய் பார்க்கிறாயே
வர்ணத்தில் வசிகரிக்கிராய்
வாசத்தில் எனை இழுத்தாய்
மின்மினி போல் பிரதிபலித்தாயே
நிலவுக்கே சவால் விடுக்கிறாயே
மயக்கும் மாலை பொழுதை விரட்டி
இனிக்கும் இன்ப இரவினிலே ஜொலிக்கிறாயே
யாருக்கும் தெரியாமல் மலர்ந்தாயே
நாற்றத்தை என் நாசியில் நுழைத்தாயே
நங்கையை போல் நகைக்கிறாயே
நறுமணம் என்ற மொழியிலயே
வீசும் காற்றுக்கு வாசத்தை விட்டு கொடுத்தாயே
உன் வர்ணத்தை எனக்கு விட்டு கொடுப்பயா
மலர்வது தேரியாமல் மறைத்தயே
பின் மனம் மட்டும் ஊரறிய செய்தாய்
மலர்ந்தாய் என்பதை இப்படி வெளிபடையாய் தெரிவித்தாயோ
வெள்ளையாய் இருக்கிறாய் ஆனால் இப்படி வெள்ளந்தியாய் இருப்பாயோ
வாசத்தை பிடித்தவன் உன் வாழ்க்கையை கொய்திடுவானே
மன்றாடி உனை காப்பேன்
மலர்களை பாறிக்கலாமா என்றேன்
மறு நாள் வந்து பார்த்தேன்
வாடிபோய் வீழ்ந்து விட்டாய்
விட்டால் சருகாய் காய்ந்திடுவாய்
முன் நாள் மனதை பறித்தாய்
இன்றோ இருப்பையே விடுத்தாய்
ஏன் உன் வாழ்க்கை இப்படி ஆனது
இது எல்லோர்க்கும் பொறுந்தும் பொல் உள்ளது
Comments
Post a Comment