இராவணேஸ்வரன்

இராவணன்


ஏதொ இருக்குதுன்னு எகிறிவந்தேன்
எமனையும் எதிர்க்க எண்ணி வந்தேன்
எக்கசெக்க வனப்பு அதொடு சேர்ந்த இருமாப்பு
முட்டிமோத முடிவெடுத்தேன்
மூடி வெச்சதனால் முயங்க வந்தேன் 
மூச்சை உணர முன்னே வந்தேன்

உணரும் முன்னே தெரிந்து கொண்டேன்
நீ மூடியிட்ட ஜாடி என்றும்
தாழ்திறந்த பூங்கதவு என்றும்
ஊழ் வினையால் முந்தி வந்தேன்
உன் யௌவனத்தில் மூழ்க வந்தேன்
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குதே..!

மக்கள் மத்தியில் மாக்களாய் ஆனேன்
மற்றவர்களிட்த்தெ மறைத்து வாழ்ந்தேன்
மாறு வேட்த்தில் உன்னை கவர்ந்தேன்
மானிடர் இல்லா இடத்தை அடைந்தேன்
மாலையிட்டவனின் மதி மயங்கியதே

உன்னை அள்ளி கொண்டு பறப்பேனோ
தினம் சுழலும் பூமியை நிருத்துவேனோ
என் அன்பை மாலையாய் தொடுப்பேனோ
இமய ஆசனத்தில் அமர வைத்து 
பிரபஞ்சத்தில் இவள் தான் ஆழகி என்று
பஞ்சபூதங்களை இவளுக்கு பணியவைப்பேன்

என் உணர்வை கண்டு அஞ்சிடுவாள்
எனக்கா இவ்வளவு என்று வியந்திடுவாள்
காட்டு பயேலே என்று ஏசிடுவாள்ந
காட்டிக்காமல் என்னை ர்சித்திடுவாள்
கண நேரத்தில் கனவனை மறந்திடுவாள்

கண் மூடிதனாமாக இருக்கிறானே
தரையில் கால் படாமல் குதிக்கிறானே
கையை பிடித்து கொண்டு பறக்கிறானே
காடு மலை எல்லாம் திரிகிறானே
மனித மிருகமாய் அலைகிறானே
யாரும் கண் படாமல் மறைக்கிறானே
மணம் இறங்க சொல்லி கேட்கிறானே
கண்டவர்களை எல்லாம் கொள்கிறானே
 நான் பத்தினி என்றாள் பரிதவிக்கிறானே
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்கிறானே
மீறி கேட்டால்
நான்கு கண்களில் ஒற்றை கனவது
சொல்லாமலே வருவது
சுவாசத்தில் தெரிவது
என் விழியால் உனக்கு அழுவது
கோடாண கோடி  உணர்விலே
கொடுத்து வைத்து உணர்வது
அதுதான் நான் உன் மீது வைத்தி இருப்பது
என்று நெகிழ்கிறானே
ஊன் உடன் உயிர் உள்ளாதால் ஒழுக்கம் என்கிறாயே
ஊனை விடுத்து இருவரும் உயிரில் கலக்கலாம் வா என்கிறானே
உலக வாழ்கையில் இது சாதியம் அன்றோ என்றேன்
உலகத்தை வென்றது என் உணர்வு என்றானே
ஒருவனுக்கு ஒருத்தி நாகரீகம் என்றேன்
அதற்கு

நாகரீகம் என்று நடிப்பவர்களே
நாற்றம் வீசும் தடதின் கண் பிறந்தவர்களே
நடு நிசியிள் நர்தனமோ
நிலைமாறும் தாண்டவமோ
நித்திரையின் சித்திரமோ
நடப்பதெல்லாம் விசித்திரமோ
நாசியில் தடம் மாறுமோ
நாபியில் இடம் மாறுமோ
நிர்வாண நாடகமோ
நாலு சுவற்றினுள் அரங்கேறுமோ
நான் நீ என்ற ஆணவமோ
நாடி தளர்ந்தவுடன் நமச்சிவாயமோ...?
நிலையாமை நிச்சயமே
நிதர்சணமான சத்தியமே....!!!!!!!!
நாடே ஆள்பவன் என்றாலும்
நாண்டு போவானே

என்று உறுமுகிறானே

உத்தமி உத்தமி என்கிறாயே உணர்வால் நீ உத்தமியா
உன்மையில் உத்தமியாக இருந்தாலும்
உன் இசைவுக்காக வேண்டுகிறேன்
உன் உடலும் அல்லாத உருவம் அல்லாத
உணர்வே போதும் என்று ஏங்குகிறேன்

உன்ணை நான் விட்டாலும்
உன் ஊருக்கு நீ சென்றாலும்
உன் கனவன் ஸ்ரீராமன் ஆனாலும்
உன் ஒழுக்கத்தை கேள்விகுறி ஆக்குவான்
உன் விருப்பத்தை தவிடு பொடி ஆக்குவான்
இன்னும் ஊரார் சொன்னால் பொதுமே
உன் உயிருக்கு உலையும் வைப்பானே
அவனும் போதும் என்ற ம்ணம் இல்லாத 
போலியான மனிதன்தானே

மாலையில் மலரும் மலர்கூட அதன்
மனம் தன்னை தழுவும் காற்றுக்கு விட்டு கொடுக்கும்
அசையாமல் நிற்க்கும் மலையை கூட 
மாரிமேகம் தழுவி மழையாய் கொட்டும்
தன்னை வேட்டும் மனிதனுக்கு கூட பூமி தாகம் தீர்க
தானே நீராய் ஊற்றேடுக்கும்
ஒன்றை ஒன்று அழித்தால்தான் உலகத்தில்
உயிர்கட்கு உணவே கிடைக்கும்

வாசத்தை விட்டால்தான் மலருக்கே பெருமை
மழையாய் வீழ்ந்தால்தான் மாரிக்கே பெருமை
நீராய் ஊற்றேடுத்தால்தான் நிலத்துக்கே பெருமை
நீயும் என்னிடத்தில் உன்னை சேர்த்தால்தான் உனக்குமே பெருமை

இவன் வெஷம் கட்டிய வம்போ இல்லை
வேறொருவன் எய்திய அம்போ
இவன் மனதென்ன இரும்போ
என் பேருமையை உலகறிய செய்ய வந்த குறும்போ
யானை வடிவில் வந்த எறும்போ
விடாபுடியில் இவன் உடும்போ
வானம்தான் இவனுக்கு வரம்போ
இரவில் மலர நான் இப்போது என்ன அரும்போ
இருந்தாலும் பரவாயில்லை என்று தாங்க
அவன் என்ன எனக்கான காம்போ

இவனை ஒழிக்க ஒருவனால் முடியாது
இன்னொருவான் வந்தாலும் இவனுக்கு இனையாகாது
இறைவனே எதிர் நின்றாலும் இவனை ஜெயிக்கலாகாது
இம்மை, மறுமை, இனிமை, தனிமை, இவனை ஒன்றும் செய்யாது

மீனுக்கே நீந்தி காட்டுவான்
மயிலுக்கே ஆட்டம் காட்டுவான்
மானுக்கே வாட்டம் காட்டுவான்
குள்ள நரிக்கே பூச்சி காட்டுவான்
பறந்துக்கே பறந்து காட்டுவான்
பாயும் புலிக்கே விளையாட்டு காட்டுவான்
பதுங்கும் நாகத்திற்கே பட்த்தை காட்டுவான்

இயற்கையை வென்றவனே இலங்கைக்கு வேந்தனே
இசையில் இறைவனை கண்டவனே
இறையொழுக்கத்தில் இவனுக்கு இல்லை ஈடு
வேத சாஸ்த்திரங்கள் இவனுக்கு தன்னிபட்டபாடு
இவன் தம்பி விபிஷனனே இவனுக்கு சாபக்கேடு
இறைவனிடம்(ராமனிடம்) போட்டு கொடுத்து இவன் உயிரை எடுத்தபாடு
இதனால் இராமன் உத்தமனா என்பதில் இல்லை உடன்பாடு

இருப்பவர்கள் இருந்துவிட்டால் இடம் போறாது
இதில் இராமனென்ன இராவணன் என்ன
இறுதியில் இறப்பு எவரையும் விடாது
இராவணனுக்கு இராமன் எய்தியது அம்போ
இல்லை இராமனே இராவணனுக்காக எய்தபட்ட அம்போ...!!!

Comments

Post a Comment

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்