கர்ணன்
கர்ணன்
கற்பு என்று எண்ணியவுடன் கர்ணன் நட்பு என்பது ஊரறியும்
ஞாயிற்றின் மீது கொண்ட ஆசையால்
ஞாலத்தில் வந்து பிறந்த இவனை
ஞாயமே இல்லாமல் ஆற்றோடு விட்டவர்களை
கருனையின் வடிவம், கடவுள், தியாகம் தவம் என்றும்
ஈடு இனை இல்லை என்றும் சொல்லுவர்
சூழ் நிலை செய்த சதியோ
சத்தியாமாக இது விதியோ
சிசுவிலேயே பாசத்தை பிரிந்தாயோ
கருனையே உனக்கு காணல் நீரோ
வகை வகையாய் வரங்களை வாங்கி பஞ்சபேறுவை ஈன்றயோ
வாஞ்சையில் விளைந்த உன்னை வழியோடு விட்டால்
வசை வருமோ என்று அஞ்சியோ
இம்மையிலும் மறுமையிலும் இதுபொல துரோகத்தை
இழைதுவிட இயலாது
இருந்தாலும் இது ஈன்றவளுக்கு ஆகாது
ஆற்றோடு விட்டுவிட்டு ஆயுளளவும் ஆனுஆனுவாய் ஆழுதாயோ
பச்சை குழந்தையம்மா இது பசியல் அழுகுது அம்மா
இச்சை தனித்ததற்கு இது இயற்கை அளித்த பரிசு அம்மா
பக்குவமாய் பாராட்ட வெண்டுமே பால் உன்ன கூட பழக வேண்டுமே
பொத்தி வைத்து பார்க்க வேண்டுமே ஈ எறும்பு கூட எமனாகுமே
பழி வருமோ என்று என்னி பாசத்தை அறுத்து விட்டாலம்மா
பாவமாக விட்டுவிட்டால் பார்போற்றும் பாண்டிமாதேவி
ஆற்றோடு போணவன் அப்படியே பொயிருந்தாள்
இந்த நிலையில்லா உலகத்தில் நயவஞ்சமாக
இறந்திருப்பான இறைவனாலேயே பாவமணித பிறவியிலே
உதிர உறவு உயிரை கொடுத்துவிட்டு ஊசலாடவிட்டாளோ
உண்மையும் புரியாமல் உலகையும் தெரியாமல்
உருண்டை உலகத்திலே மிதந்து சென்றானே
உயிருடன் மீண்டானே உயிரோட்டமான உறவை
தேரோட்டியின் உருவில் உணர்ந்தானே
உவகையுடன் மீட்டார்களே
உறவே நீ பெறாத பேறுவே
மழலை அமுதமே மாசரு பொண்னே
என்று மணம் துடித்து போணார்களே
சந்தோஷத்தில் திளைத்தார்காளே சந்ததி தழைத்ததென்று
ஆடை ஆபரணங்களால் அல்ங்கரிதார்களே
அழகாய் ஆராதித்தார்களே
பொண்ணும் பொறுளும் ஆறியா வயேதிலே
போட்டு இருந்த அணியை எடுத்து கொடுத்தானே அடியவர்கு
வாரி வழங்கும் வள்ளல் என்றும்
கொடுப்பதர்கே பிறந்த கொடையான் என்றும்
வாயார வாழ்த்தினரே கர்ணன் என்று பெயர் சூட்டினரே
வீரதீரத்தில் சிறந்து விளங்கிணானே
வேண்டுவோர்க்கு வேண்டுவதை வழங்கினானே
வில் வித்தையில் வில்லானை விஞ்சினானே
விதி ஆனால் இவனையும் விடவில்லையே
குல்ங்கோத்திராம் அற்றவன் என்றும்
தேரோட்டியின் மகன் என்றும் சபைகளில் ஏசப்பட்டனே
எல்லோருடைய ஏளனத்துக்கும் ஏப்பம் ஆனானே
தைரியம் கெடயம் மூலம் எல்லாவற்றையும் தடுத்தானே
தீட்டபட்ட கூர்வாளை போல் தெளிந்த புத்தியுடன்
தேவை இல்லாம்ல் சீண்டுபவர்கட்கு சூடு போட்டானே
வள்ளலே வீரனே வாரி வழங்கும் திறமையே
வில்லுக்கு விஜயனே ஆனால் விஜயனும் உன்னிடத்தில் பொடியனே
பாவம் செய்தவர்கள்தான் பிறவி எடுப்பர்களாம்
பாவம் அவன் பாமரன் ஆனால் என்ன பிரபுவானால் என்ன
பகைமை, பிணி, பிரிவு, பித்தம் எதுவும் அவனை விடாது பிரியாது
இருந்தும் உன்னை பிறப்பை பற்றி பழிபேச
இந்த அவையோர்களுக்கு பிடித்துவிட்டது
நாதி இல்லாதாவன் என்று நகைத்தவர்களுக்கு முன்னால்
நாட்டையே தந்து நண்பனும் ஆனானே
நான் வேறு நீ வேறு இல்லை
நாமாகி விட்டோமே நட்ப்புக்கும் மானம் உண்டு கற்புக்கு மட்டுமா
நல்ல இலக்கணமாக திகழ்ந்தானே
மாட்சிமை பொருந்திய கௌரவர்களின் முதல்வனே
எங்கள் துரியோதனனே..!
பொறுத்தவர் பூமி ஆள வேண்டி
பரதெசி பிரித்தாண்ட நாடு நம் பாரத நாடு
இதில் பாண்டவனாவது பாளையத்துகாரனாவது
பஞ்சம் பிழைக்க வந்தவனிடம் பனையம் வைத்துவிட்டு
பகைமை பாராட்டி போட்டு கொடுத்துவிட்டு இருப்பதை
பறி கொடுத்தவர்களே
கையில் வைத்து காத்திருந்தாள்
காலை சுற்றும் நன்றி மிக்க நாய்கள் உள்ள நாட்டில்
நய வஞ்சக நாயாக ஏன் நரியாக
நம்மையும் நம் இனத்தையும் நம் பண்பாட்டையும்
நன்முறைகளையும் நம் முதுகின் மீது ஏறி கொண்டு
நம் தலையை மொட்டை மாழித்த வெள்ளை பண்டாரமான
வெட்கம் விட்டவர்களையே நாம் ஏற்று கொண்டோம்
தன் நலத்திற்காக வாழும் தரணியிலே
தப்பி பிறந்தவனாம் நீ
தானும் சளைத்தவன் இல்லை
தாமாக தருவது இயற்கை
தருபவனுக்கே தருபவன் கௌரவ மூத்தோன்
தன் மனையை தற்செயலாக நீ எட்டி
பிடிக்க அறுந்த மெகாலாபரணத்தை
தவறில்லை தமக்கைதானே வருந்தாவும் வேண்டாம்
திருந்தவும் வேண்டாம்
திரிந்த மணிகளை எடுக்கவொ தொடுக்கவோ என்றானே
துரியோதனன்
பாவபட்ட மனிதபிறவியிலே பாவாமான உன் கதையை கேட்டால்
பாவ விமோட்சனம் கிடைக்கும் என்று மானிடப்பதர்கள்
பாவமாய் உன் கதையை படைத்தார்களோ – இல்லை
தருமம் வாழவேண்டி தருமத்தையே(உன்னையே) அழித்து
தருமம் வென்றது என்றானே கண்ணன் எனும் கடவுள்
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தாய் என்றார்களே
சேர்ந்தது சேராதிருப்பது சேர்த்துவைப்பது எல்லாமே
அவந்தானே அவனின்றி ஓரனுவும் அசையாதே பின் ஏன்..?
மனித வாழ்கையில் வாழ்வு மயக்கத்திலே
வாழும் பதர்களே
உலகமேடையில் உறவு நாடகத்தில்
அறிவு ஆயுதம் ஏந்தி இருக்கிறதை பதுக்கும் அற்பனே
எல்லாவற்றுக்கும் பொதுவானவன் நீ
மறந்தயோ காற்றுக்கு பொதுவானவன் நீ
நீருக்கு,
நிலத்திற்கு,
ஆகாயத்திற்கும்,
நெருப்புக்கு பொதுவானவன் நீ
நிலத்தை மட்டும் எனது என்பது ஏன்
இப்போது நீரும் கூட விடவில்லையே நீ
அதற்கு உன் கையை வெட்டி எடுத்து உனது என்று சொல்லலாமே
பார்த்து நடந்துகொள் மானிடனே
பாவபட்டதால்தான் நீ மானிடமே
பச்சை செடிகள் பதுக்கி கொண்டால் பசிக்கு கூட உணவில்லை
நிற்க்கும் மரங்கள் பதுக்கி கொண்டால் ஒதுங்க கூட நிழல் இல்லை
ஓடும் நீர் பதுக்கி கொண்டால் தவித்தவாய்க்கு தண்ணிர் இல்லை
ஏங்கும் நிறை காற்று பதுக்கி கொண்டால்
உன் உயிர் கூட உனதில்லை
இதில் உனது எனது என்றும் எதுவும் இல்லை.
Comments
Post a Comment