வெற்றிடம் கூட காற்றுக்கு வேளியே
இல்லையே”
வஞ்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையே
வாசத்தை பிடிக்க வாடாமல்லிக்கு தெரியலயே
விரும்பியதை வெளிபடுத்த வீனனால் முடியலயே
வளைந்து கொடுக்காமல் நானல் வளரலயே
வறுமையை தொடாமல் வாழ வழி இல்லையே
வசந்தம் வராமல் வளங்கள் பிறக்கலயே
வின்னுயர் வளாகங்கள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியே
விந்து சிந்தாமல் விருத்தி இல்லையே
வியர்வை விடாமல் வரலாறு ஆகவில்லையே
விவேகம் இருந்தும் வீரம் பத்தலயே
விடியல் வந்ததும் இரவு தங்கலயே
விளக்கு வைக்காமல் வேஷம் துறக்கலயே
விருப்பம் இராமல் வேண்டுவதில்லயே
விரிசல் விழாத உறவுகள் தொல்லையே
விரித்து பார்தலும் விந்தை விளங்கவில்லையே
விட்டதை பிடிக்க வழி தெரியலையே
வளைவுகள் இல்லாத வழிகள் இல்லையே
வாமண அவதாரம் விஷுனுவின் லீலையே
வந்தவன் வீழுந்து மடிவது இயற்கை நியதியே
வானம் பார்காத பூமி இங்கு இல்லையே
வழங்கியதை வகுத்துன்ன மனம் வரவில்லையே
வீனை மீட்க வித்துவான் வரனும் என்றில்லையே
வித்தியாசம் பார்கின் வளர்ச்சி இல்லையே
விடாமுயற்சி இல்லாமல் வெற்றி வரவில்லையே
வாய்காள் இல்லாமல் விவசாயம் இல்லையே
வணக்கம் சொல்லத வாசிப்பு விரும்ப வில்லையே
வடித்து பார்க்காமல் சிற்பம் இல்லையே
வயதை கடகாத வாலிபம் இல்லையே
வெறுமென கேட்டாலும் வேலை இல்லையே
வரைமுறை இல்லாமல் எதுவும் இல்லையே
வாய்பாடு இல்லாத வாசிப்பில் பொருள் இல்லையே
வெற்றிடம் கூட காற்றுக்கும் வேளியே
விளம்பரம் இல்லாமல் வெளியில் தெரிவதில்லையே
விளக்கினை நம்பி வெளிச்சம் இல்லையே.
Comments
Post a Comment