வருடபிறப்பு
வசந்தகாலத்தை வரவேற்க்க விழைப்பு
வாருங்கள் வாய்விட்டு சிரிக்க அரிய வாய்ப்பு
விலக்குவோம் வித்தியாசம் விருப்ப மணம் பூரிப்பு
வெறுமை விரட்டி அள்வில்லா அன்பு வாரி இறைப்பு
விட்டு கொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை வியப்பு
வீடுமில்ல வாசலுமில்ல விரக்தியுமில்ல பிழைப்பு
வறுமை இடத்தே வழங்கும் வள்ளல்குணமிருப்பு
வேடிக்கை வாழ்க்கை வருவதும் போவதும் நடப்பு
வேண்டாதவை விரட்டியும் சரிந்தால் மணல் ஆனால் சிறப்பு
விட்டதை பிடிக்காமல் வெற்றிடமானாலும் தலைப்பு
வேஷமிடம் மானுடம் நாகரீகத்தின் பிடியில் தவிப்பு
வெட்டி புதைத்தாலும் வீர்ய வித்தாகிட முனைப்பு
வேராக மறைந்து விருட்சமாகிட அழைப்பு....
வாழ்த்துக்கள் ...தமிழ் வருடபிறப்பு
வேப்பம்பூவெடுத்து வெல்லம் சேர்த்து நீர் பருகு மதிப்பு
Comments
Post a Comment