மாரியம்மா
மஞ்சள் உடுத்தி மங்களம் வேண்டி
மஞ்சள் நீரை மாறி மாறி உன் மீது ஊற்றும்
மனித இம்சையை மனதில் வைக்காமல்
மறுகணமே மன்னித்துவிடும் மழலை போல
மாட்டி கொண்டாய் மக்கள் வெள்ளத்தில்
மாரியம்மா இது உன் மகிமையோ இல்லை
மனிதர் மடைமையோ, என்
மனம் ஆறியாமல் தவிக்கிறதே..?
ஆளாளுக்கொரு ஆசை
அனைவருக்கும் அருள்
ஆனாலும் இது அதிகம்
அண்ணபூரணியே அறண்டிடுவால்
ஆருடம் தவிர்த்து
அன்பை வளர்த்தால்
அன்பே காப்பாற்றும்
அபத்தம் அகலும்
அறிவுக்கு மீறியது ஆண்டவம்
சித்து வேலைகளை செய்து உன்
சீடர்கள் என்று சிருங்காரம் பூசி கொள்ளும்
சிலர் முற்றும்துறந்தவர் என்று சொல்லி
முந்தி(ப்)யை பிடிக்கிறார்கள்...
Comments
Post a Comment