பிச்சை

இயற்க்கையிட்ட  வாழ்கை பிச்சை, வாய்ப்பு

இனிமை தரும் தனிமை பிச்சை, இறப்பு

இச்சை தனிக்க இருவர் பிச்சை, பிறப்பு

இல்லை என்று நழுவும் பிச்சை, பிழைப்பு

இளமை தரும் வனப்பு பிச்சை,  நடிப்பு 

முதுமை தரும் கணிப்பு

பிச்சை, பிடிப்பு

இருப்பவற்றை துறக்கும்

பிச்சை...தவிப்பு

கொடுப்பவற்றை பிடுங்கி பதுக்கும் பிச்சை, அதுப்பு 

இருந்தபோதும் இல்லா பிச்சை, வெறுப்பு

இடையில் வந்து இம்சை பிச்சை அரிப்பு...

இளித்த வாயன் எகிரி அடித்தால் இளப்பு  

இளவஞ்சியின் இரவு பிச்சை,விருப்பு ...

இறுக்க தழுவ பிறக்கும் பிச்சை பொறுப்பு...

இருக்கிறது எல்லாம் பொதுவாய் போனால் சிறப்பு"...

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்