ஏறுதழுவல்
ஏரிக்கும் ஆற்றுக்கும் தண்ணீர் வருவது எங்களுக்கு புதுசு
ஏறுபூட்டும் எங்களினத்தால்
விளைந்திடுமா தரிசு
எஜமானனாய் போற்றிட
உழவுக்கு பரிசு
ஏறுதழுவல் எக்காலமும் பழகிட
கொட்டிடும் முரசு
எரிவாயுக்கு துளையிட வந்தால்
ஒதுக்கிடுவோம் அரசு
ஏற்றிவிட்டவரை எட்டி உதைத்திட
தாழ்ந்திடும் சிரசு
ஏமாற்றி பிழைத்திடோம்
காத்திடும் நீதி தராசு
எதுவாக இருப்பினும்
ஏதுவாக மாற்றினால்
ஏற்றம் என்பது
எட்டிடும் எளிதில் புதுசு
Comments
Post a Comment