உத்தம உடல்மொழி
ஒரு சிலரே
உம்மையும் எம்மையும்
உச்ச சாரிரத்தில் உணர
ஊர்பழி படா
உத்தம உடல்மொழி
உதிர உமிழ் உண்மையை
உள்வலி உயிர் வெளி
உயிரி அதிர்வு
உச்சபட்ச
உன்னத உக்கிர
உந்தம்
ஊடூருவி உயர் நிலை
உருகும் தேக உபந்யாசம்
உன்னிடம் ஜெனித்து
உள்வாங்கும் உரிமம்
உம்மையும் எம்மையும்
சேரும்
Comments
Post a Comment