பிர்ம்மசர்யம்
உன்னதத்தில் உயர்ந்ததாம்
ஒழுக்கத்தில் சிறந்ததாம்
பேரிண்ப பெருவெள்ளமாம்
பிறப்பு பிணி ஒழிப்பதாம்
ஜீவன்முக்த்திக்கு வழியாம்
ஜென்ம சாபல்யத்தை முடிப்பதாம்
ஆசை தீயை அழிப்பதுவும்
அளவு கடந்த அன்பை தடுப்பதுவும்
ஆட்படுத்தப்பட்டு பிறவி
பெருங்கடலில் தத்தளிப்பதுவும்
நன்மை தீமை என்று பிரிப்பதுவும்
தன் நலம் தழைப்பதுவும்
தரணியில் தனிமை தீர்ப்பதுவும்
அனுபவம் அநுகூலம்
அழகு ஆவல் அனுதினமும்
அனைத்தும் அர்த்தம்
ஆக்கம் அதனுடன் அர்ப்பம்
அருவருப்பு அழிவு
அவையாவும் கடக்கும்
ஆச்சர்யம் அதுதான்
பிர்ம்மசர்யம்
அனுதினமும் கடைபிடிக்க
அல்லல் தீருமோ
ஆமோதிக்க ஆசை விடுமோ
ஆளுங்கள் ஆகாய மார்கமாக
வாழலாமாம் வளி மட்டுமே
வைத்து....
Comments
Post a Comment