நீ ஒருத்தி”
”நீ ஒருத்தி”
உறவென்றால் எனக்கு அது நீ ஒருத்தி மட்டும்தான்
பிரிவென்றால் அது நான் இறக்கையில் மட்டும்தான்
உயர்வென்றால் அது நான் உன்னுடன் இருக்கையில் மட்டும்தான்
உரிமை எடுக்க வேண்டும் அதை நீ என்னிடம் மட்டும்தான்
வாசலிலே உன் காத்திருப்பு என் வருகைக்கு மட்டும்தான்
வேஷம் என்றாலும் வாழ்க்கை அது உன்னுடன் மட்டும்தான்
உன் ஆவலால் வளர வேண்டும் என் ஆரோக்கியம் மட்டும்தான்
நீ அரை மனிஷியாய் நிற்பாய் என்னிடம் மட்டும்தான்
உன்னிலை மறந்தாலும் என் கண்ணியம் உன்னிடம் மட்டும்தான்
உன் பருவத்தின் பயிர் என் உயிரொடு மட்டும்தான்
என்னையே இழப்பேன் உனக்காக ஏழேழு ஜன்மம் மட்டும்தான்
Comments
Post a Comment