தன்னிகரில்லா எல்லை
தாயின் மடியில் பிள்ளை,
தவிப்பு என்பது இல்லை,
தாங்கும் மனது வெள்ளை,
தீங்கு நீங்கும் சொல்லை,
தேவை தீர்க்கும் எல்லை,
தெய்வம் சிரிப்பு முல்லை,
தரிசிக்க சென்ற தில்லை
நிதர்சன உருவக் கல்லை
நித்திய அடங்கா கிள்ளை
நாடி தளர்ந்தது கொல்லை
தானே தந்த வில்லை
தரமான அன்பு தொல்லை
தன்னிகரில்லா எல்லை
தரணி காண வில்லை...
Comments
Post a Comment